கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று காவலர் ஒருவரிடம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடிந்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வாடகை காரில் வரும்பொழுது அந்த டிரைவருடன் போதையில் தகராறு ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்பொழுது அந்த டிரைவர் உடனடியாக காரை ஓரம் நிறுத்தி காரில் இருந்து இறங்கி பொதுமக்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.
பின்னர் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் ஆனால் காவல்துறையினர் வருவதற்கு முன்னர் காலதாமதம் ஆனதாக தெரிகிறது ஆனால் அதற்குள் அந்த வெளிநாட்டு நபர் போதையில் மக்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது பின்னர் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து அங்கு வந்த காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதனிடையே அவ்வழியாக வந்த தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்பி வேலுமணியிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். எஸ் பி வேலுமணி உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிலையில் அவர்களை தொடர்பு முடியவில்லை என்று தெரிகிறது.
அதனால் சற்று கோபமடைந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி அங்கு வந்த காவலரிடம் காவல்துறை ஏன் வரவில்லை, நான் DIG யிடம் சொல்ல போகிறேன். SP, DSP க்கு தொடர்பு கொண்டால் அவர்கள் எடுக்கவில்லை.
வெளியூர் காரன் கஞ்சா போதையில் நடந்து கொள்கிறான் ஊர் மக்கள் அவனை பிடித்துள்ளார்கள். ஊர்மக்கள் இல்லை என்றால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். காவல்துறை செய்ய வேண்டிய வேலையை ஊர் மக்கள் செய்திருக்கிறார்கள். யார் அவர் என்று விசாரித்து நடவடிக்கை எடுங்கள் அவர் யாராக இருந்தால் என்ன?காவல்துறை செய்வதில் நியாயமே இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்பொழுது எஸ்பி வேலுமணி காவலரிடம் கடிந்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.





