பிரபல தொகுப்பாளருடன் 2வது திருமணம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ!

இரண்டாவது திருமணம் செய்தது குறித்து பல தகவல் பரவி வந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய இந்த தொடர், அதன் உணர்ச்சி மிகுந்த கதைமாந்தர்களாலும் திருப்பங்களாலும் கவனம் ஈர்க்கிறது.

Pandian Stores

தற்போது கதையில் முக்கியமான முன்னேற்றமாக, மயில் கர்ப்பமாக இருப்பது பாண்டியன் குடும்பத்தினருக்கு தெரியவருகிறது. இதன் மூலம் கதை மேலும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், கோமதி நேரடியாக மயிலின் வீட்டிற்கு சென்று பேசவிருப்பதும், அடுத்த எபிசோடுகளுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

ஹாசினி மறுமணம்

இந்த தொடரில் பாண்டியனின் மகளாக ‘குழலி’ கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹாசினி. இவரின் தனிப்பட்ட வாழ்க்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக, அவர் மறுமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின.

Vilasini hasini

இந்த நிலையில், ஹாசினி தானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மறுமணம் செய்திருப்பது பிரபல தொகுப்பாளர் ஆதவன் என்பதும் உறுதியாகியுள்ளது.

கணவர் ஆதவன் யார் தெரியுமா?

ஆதவன் ஒரு சாதாரண தொகுப்பாளர் மட்டும் அல்ல. தஞ்சாவூரைச் சேர்ந்த அவர், ரேடியோ ஜாக்கி (RJ), வீடியோ ஜாக்கி (VJ), மிமிக்ரி கலைஞர் மற்றும் நடிகர் என பல துறைகளில் திறமையை நிரூபித்தவர். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற அவர், பின்னர் ஆதித்யா தொலைக்காட்சியில் கொஞ்சம் நடிங்க பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் புகழ் பெற்றார்.

VJ Aadhavan and Hasini Family Photos

மேலும், பல காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் செயல்பட்டு, தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் மிமிக்ரி திறமையால் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்துள்ளார்.

இப்போது, ஹாசினி வெளியிட்ட வீடியோவில், தனது மறுமண வாழ்க்கை மற்றும் குழந்தை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளதுடன், குழந்தையின் காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். இதனால் இந்த ஜோடி குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தனுஷ் – மிருணாள் இணைவது உறுதி.. பேச்சுவார்த்தை சக்சஸ்!

தனுஷ் - மிருணாள் குறித்த வதந்திகள் இணையத்தில் பரவிய நிலையில் தற்போது இருவரும் இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்முகம் கொண்ட தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் தனுஷ்....

Video