97 திமுக கவுன்சிலர்கள்- ஆட்சி தவெக ஆட்சி- கோவை மாநகராட்சி புதிய ஆணையாளரின் அதிரடி பதில்…

கோவை: எந்த ஆட்சியாக இருந்தாலும் விதிகளின் படி நடப்போம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை மாநகராட்சி ஆணையாளராக இன்று கட்டா ரவி தேஜா பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ஆணையாளர் அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுபேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகராட்சி ஆணையாளர், கோவை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சென்னையில் பணியாற்றிய அனுபவம் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பொருத்தவரை குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறிப்பாக பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கு கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் பணிபுரிவதை பெருமையாக நினைப்பதாகவும் கூறினார்.

Advertisement

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு மக்களிடம் பேசும் பொழுது தான் பல்வேறு விஷயங்கள் தெரியவரும் என்று தெரிவித்தார். கள ஆய்வு மேற்கொண்டு பிரச்சனைகளுக்கான முழுமையான தீர்வை காண்பேன் என்றும் கோவை தனக்கு புதிது என்றும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி 97 பேர் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் இருக்கிறார்கள், ஆட்சி தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியாக இருக்கும் பொழுது சவால் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு என்ன விதிகள் உள்ளதோ அதன்படி நடப்போம் என்று தெரிவித்தார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...