கோவை வாக்காளப் பெருமக்களே… ரெண்டு பேரும் வராங்க!

கோவை: கோவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி- முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்தடுத்து வர உள்ளதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் , அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

கோவைக்கு வருகிற 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். கோவை கொடிசியாவில் நடைபெறும் வேளாண் விஞ்ஞானிகள் மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். இதில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி விருதுகள் வழங்குகிறார்.

அதேபோன்று வருகிற 26 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலின் கோவை வர உள்ளார். கோவை மத்திய சிறைச்சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா வை முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் 26 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

கோவைக்கு அடுத்தடுத்து பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீசார் மற்றும் கோவை விமான நிலைய பாதுகாப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்

Advertisement

இதில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அதேபோன்று முதலமைச்சர் மு க. ஸ்டாலின் நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா பகுதி விரைவில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது. பிரதமர் மோடி வந்து செல்லும் பாதைகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...