கோவையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் செல்போன் பறிப்பு!

கோவை: கோவையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜதுரை (23). தனியார் அறக்கட்டளையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

நேற்று முன்தினம் அதிகாலை இவர் தனது பைக்கில் லங்கா கார்னர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போல ராஜதுரை தன்னிடம் இருந்த செல்போனை கொடுத்தார். அதனை பெற்று கொண்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து ராஜதுரை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ராஜதுரையிடம் செல்போன் பறித்தது திருவண்ணாமலையை சேர்ந்த முஸ்மில் கான் (20) மற்றும் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (22) என்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ராஜதுரையின் செல்போனை மீட்டனர்.

Recent News

சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார். பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

Video

Join WhatsApp