தமிழக அரசு இதனை அனுமதித்தால் முதல்வர் வரும்பொழுது பாஜகவும் அதனை செய்யும்- கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி…

கோவை: பிரதமர் வரும்போது கருப்பு பலூன், கருப்புக்கொடிகளை தமிழக அரசு அனுமதித்தால் தமிழக முதல்வர் எந்த இடத்திற்கு சென்றாலும் பாஜகவும் அதையே செய்யும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாளை கோவைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் ஏற்பாடுகள் பாஜக கட்சி சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விமான நிலையம் பகுதியில் வரவேற்பு ஏற்பாடுகளை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொருளாளர் எ பி முருகானந்தம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் வருகையொட்டி அவரை வரவேற்கும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக கூறினார். காவல்துறை பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் மிக கடுமையாக உள்ளது, பாதுகாப்பு முக்கியம் என்றால் கூட அவரை வரவேற்க தொண்டர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் காவல்துறை முழு ஒத்துழைப்பு கொடுத்து அந்த இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும் காவல்துறை ஒத்துழைப்பு விரைவாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு என கூறினார்.

விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது என்பது இயற்கை விவசாயம் சார்ந்த விவசாயிகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்றார். இரசாயனத்தால் மண்ணின் தன்மை மாறி கொண்டு இருக்கிறது, இயற்கை விவசாயம் என்பது முன்னோர்கள் அழைத்துச் சென்றுள்ள கொடை பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சில சமயங்களில் மாநிலத்தின் முதலமைச்சர்கள் கலந்து கொள்வதில்லை அரசியல் காரணங்களுக்காக எதுவாக இருந்தாலும் கூட நாட்டின் பிரதமர் வருகின்ற பொழுது மாநிலத்தின் முதல்வர் வரவேற்பது என்பது தான் Protocol ஆக இருக்கும் என்றார்.

Advertisement

தமிழகத்தினுடைய சார்பில் இது போன்ற விஷயங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேளாண்துறை பட்ஜெட்டில் 80 சதவிகிதம் அறிவிப்புகள் மத்திய அரசின் உதவியோடுதான் நிறைவேற்றுவார்கள் மத்திய அரசின் நிதியை எடுத்துக்கொண்டு மாநில அரசு ஒரு பெயரை வைத்துக் கொள்வார்கள் என்றார். பிரதமருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்படுவது குறித்தான கேள்வி- எந்த போஸ்டர் அச்சடித்தாலும் அதன் பிரிண்டர் யார் என்பது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றார். முற்போக்கு அமைப்புகள் என்கின்ற பெயரில் தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது இரண்டு அமைப்புகளுக்கு இடையில் வன்முறையை தூண்டும் வகையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது என்றார்.

மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி வர வேண்டும் என்பதற்காக கருப்பு கொடி எல்லாம் காட்டாமல் இருந்தார்கள், ஆனால் தற்பொழுது தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக திமுக கருப்புக்கொடி கருப்பு பலூன் என்பதையெல்லாம் கையில் எடுத்து உள்ளார்கள் குரங்கு குட்டியை வைத்து சூடு பார்க்கின்ற விதமாக முற்போக்கு அமைப்புகளோ என்று எங்களுக்கு சந்தேகமாக உள்ளது தமிழ்நாடு அரசின் உதவியோடு இதனை செய்கின்றார்களோ என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

Advertisement

பிரிவினைவாத அமைப்புகளுக்கும், முற்போக்கு அமைப்புகளுக்கும் பின்னால் திமுக தான் இருக்கிறது தி.க காரர்கள் தான் உள்ளார்கள் கருப்பு பலூன் கருப்புக்கொடி ஆகியவற்றை தமிழக அரசு அனுமதித்தால் தமிழக முதல்வர் எந்த இடத்திற்கு வந்தாலும் பாஜகவினரும் இதை தான் செய்வார்கள் என்றார். மேலும் யார் அந்த நபர்கள் என்று கண்டறிந்து முன்பே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SIR யை பொறுத்தவரை திமுக அரசு எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள், இதற்கு அரசே ஸ்பான்சர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது, எப்படி இருக்கும் பொழுது தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் எவ்வாறு முழுமையாக ஒத்துழைப்பு நல்குவார்கள்? என கேள்வி எழுப்பினார்.

கல்லூரி மாணவர்களை தன்னார்வ தொண்டர்களாக சேர்த்து இந்த பணிகளை மேற்கொள்ளலாம், அரசியல் காரணத்திற்காக இதில் ஏதாவது குளறுபடி செய்ய முடியுமா என நினைக்கிறார்கள் கள்ள வாக்காளர்களை அப்படியே வைத்துக் கொள்ள முடியுமா என நினைக்கிறார்கள் கள்ள ஓட்டு போடுவது திமுகவிற்கு பெரிய பலம் என்றார்.

அசாம் மாநிலத்திலும் தேர்தல் நடைபெறுகிறது அது சிறப்பு மாநிலம் என்பதால் அதற்கு ஒதுக்கப்படும் நீதி சதவீதம் சற்று அதிகமாக தான் இருக்கும் என தெரிவித்தார்.

பிரதமரை வரவேற்க ஐம்பதாயிரம் பேர் கலந்து கொள்ளும்படி ஏற்பாடுகளை செய்து உள்ளோம் ஏபி முருகானந்தம் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்றும் கூட்டணி கட்சிகள் யாரும் பிரிந்து செல்லவில்லை அனைவரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள் தேர்தல் நெருங்கும்பொழுது கட்சியின் தலைமை கூட்டணி விஷயங்களை அணுகும் என்றார்.

பீகார் வெற்றிக்கு பிறகு பீகார் மாநிலம் போலவே தமிழ்நாடு வருமா என்று மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது ஆவல் உள்ளது என்று கூறினார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுகவும் சேர்ந்து கலந்து கொள்கிறார்கள்,கிளியாக இருப்பது திமுக மட்டும் தான் திமுகவை எவ்வாறு வீட்டிற்கு அனுப்புவது என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்றார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.