கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் 15 ஆயிரம் பரிசு- கோவையில் போஸ்டர்…

கோவை: எங்கள் வீட்டு செல்லப் பறவையை கண்டுபிடித்து கொடுத்தால் 15 ஆயிரம் பரிசு வழங்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர்கள் கதிர் குடும்பத்தினர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கிளி வகையை சேர்ந்த வெள்ளை நிற காக்டெயில் பறவையை வளர்த்து வந்துள்ளனர். அதற்கு மியா என்று செல்ல பெயரையும் வைத்து வளர்த்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி அந்த பறவை வீட்டிலிருந்து பறந்து சென்று விட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து பல இடங்களில் தேடி பார்த்தும் பறவை கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்த பறவையை கண்டுபிடித்து தருமாறு அக்குடும்பத்தினர் கோவையில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். பறவை காணாமல் போனதால் குழந்தைகள் கவலையாக இருப்பதாகவும், எங்கள் செல்லப் பறவை கண்டு பிடித்து கொடுத்தால் 15 ஆயிரம் பரிசு பணம் கொடுப்பதாக அறிவித்து உள்ளனர்.

போஸ்டரில் அந்த பறவையின் புகைப்படம் , வயது, நிறம் அனைத்தும் குறிப்பிட்டு பறவையின் முன்பு துண்டு எடுத்து சுற்றினால் தானாகவே வந்து அமர்ந்து கொள்ளும் என்றும் மியா என்று அழைத்தாலோ அல்லது PEEK-A-BOO என்று அழைத்தாலோ வந்து விடும் என குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

யாராவது அந்த பறவை கண்டு பிடித்தால் 9994349476 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சுந்தராபுரம், கிணத்துக்கடவு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை சுந்தராபுரம் கிணத்துக்கடவு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார் கோவை மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...