MGR ஆத்மா சாந்தி அடையவில்லை: கோவையில் போஸ்டர்!

கோவை: கோவையில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தியடையவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் ஜிம் சுகுமாரன். இவர் ரயில் நிலையம் எதிரே உள்ள சாலை தடுப்புச் சுவர்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டரில், எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை உருவாக்கினார். மக்களுக்காக உழைத்த தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால், இன்று அவர் உருவாக்கிய கட்சியில் பதவிக்காக சண்டை போடுகிறார்கள்.

கட்சி சின்னத்தை முடக்கவும் முயல்கிறார்கள். அத்திக்கடவு திட்ட விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தவறானது.

Advertisement

அதேசமயம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் இடையே உள்ள முரண்பாடுகளும் தொடர்கின்றன. இந்நிலையில், எம்ஜிஆர் ஆத்மா இன்னும் சாந்தியடையவில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அவர் உண்மையான சாந்தி அடைவார்” என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வில் தொடர்ந்து பூசல்கள் எழுந்து வரும் நிலையில், தொண்டர் ஒருவர் இப்படியான போஸ்டரை ஒட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அக்கட்சியினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முதல்வர் விஜய் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்- கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தல்…

கோவை: நீட் தேர்வு விலக்கு பெறும் வரை முதலமைச்சர் விஜய், உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவையில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி அனு...

Video

அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில்...