கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய எட்டிமடை மலைப்பகுதியில் திடீரென ராட்சத பாறை ஒன்று மலையில் இருந்து உருண்டு வந்தது. அப்பொழுது பெரும் சத்தம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அலறி எடுத்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்துள்ளனர்.
நல்வாய்ப்பாக அந்த பெரிய பாறை பாதியிலேயே நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாறை கொண்டு வந்ததை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் தற்பொழுது அந்த வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து வனத்துறையினரிடம் கேட்கும் பொழுது பெரியப்பாறை உருண்டு வந்தது உண்மைதான். பாதியிலேயே அது நின்று விட்டது இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலங்களில் அப்பகுதியில் இதுபோன்ற அடிக்கடி நேர்வது வழக்கம் ஆகும்.




