நயினார் நாகேந்திரன் பதவி மாற்றம்?- நாராயணன் திருப்பதி கொடுத்த பதில்…

கோவை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதவியில் இருந்து மாற்றபடுவதாக வரும் தகவல் குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார்.

பாஜக மாநில துணைத்தலைவரும் செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை மாற்றப் போவதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு மலிவான அரசியல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அப்பதவியில் இருந்து மாற்றப்பட போவதாக இன்று சமூக ஊடகங்களில் மற்றும் சில ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சிறப்பான முறையில் பாரதிய ஜனதா கட்சியை முன்னெடுத்து செல்லும் நயினார் நாகேந்திரன் அவர்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மலிவான அரசியலை செய்து வருகின்றனர்.

காங்கிரசை போல மாநில தலைவரை மாற்றுவது என்பது பாஜகவில் சுலபம் கிடையாது. எங்களது தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்படி இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தொடர்வார் அவர் மாற்றப்படுவதாக பரப்பப்படும் செய்தியில் உண்மை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்றார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றியை பெறும் என தெரிவித்தார்.

மேலும் பேசியவர் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார், ஆனால் குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள்தான் முதலீடுகளில் முன்னணியில் உள்ளது. தொழில் வளர்ச்சி குறித்து தவறான தகவல்களை கூறியுள்ளார் என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.