ரோலக்ஸ் யானை இறப்பு- ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் வெங்கடேஷ் விளக்கம்…

கோவை: ரோலக்ஸ் காட்டு யானை, ஆனைமலை வனப்பகுதியில் வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதிகளில் விவசாய நிலங்களை ரோலக்ஸ் என்ற காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து , கடந்த அக்டோபர் 17ம் தேதி அந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பின்னர் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியார் முகாமில் மரக்கூண்டில் ஒரு மாதம் ரோலக்ஸ் யானை அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு பின்னர் மந்திரி மட்டம் வனப் பகுதியில் கடந்த நவம்பர் 12 ம் தேதி ரோலக்ஸ் காட்டு யானை விடுவிக்கபட்டிருந்தது.
மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் மந்திரி மட்டம் பகுதியல் ரோலக்ஸ் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நவம்பர் 12 ம் தேதி மந்திரி்மட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு தினமும் ரேடியோ சிக்னல் வைத்து, தினமும் நேரில் பார்த்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர் என்றார்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை 11.45 மணியளவில் ரேடியோ சிக்னல் கிடைத்த நிலையில் , யானை இருக்கும் பகுதியை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர், பிற்பகல் 2 மணி வரை யானை ஊழியர்களின் கண்காணிப்பில் இருந்தது தொடர்ந்து 2 மணி அளவில் அங்கிருந்த ஓடையின் அருகில் தண்ணீர் குடிக்க சென்ற போது வழுக்கி விழுந்தது என்றார்.

இதை பார்த்த வன ஊழியர்கள் உடனடியாக அங்கு செல்ல முடியாத நிலையில்,
அரை மணி நேரத்திற்கு பின்பு ரோலக்ஸ் யானையின் அருகில் சென்று பார்த்த போது யானை இறந்து இருப்பது தெரியவந்தது என தெரிவித்தார். இதனை அடுத்து யானையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வனத்துறை ஊழியர்கள் எடுத்து அனுப்புவதற்கு தாமதமாகி விட்டது என தெரிவித்தார்.
யானையின் மரணம் குறித்து விசாரிக்க தனிக்குழுவை தலைமை வனப்பாதுகாவலர் அமைத்துள்ளார் என்றும், நாளை இந்த குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்வார்கள் பின்னர் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்தார்.

Advertisement

இறக்கத்தில் வழுக்கி விழுந்து யானை உயிரிழந்துள்ளது, யானையின் வாயில் உட்கொண்ட புல் உள்ளிட்டவை இருந்துள்ளது அந்த பகுதி பெரிய அளவிலான சரிவு கிடையாது, சிறிய குன்றுகள் இருக்கும் இடமாகும், ஆனால் அந்த பகுதியில் உள்ள மண் வழுக்கும் தன்மை கொண்டதால் யானை வழுக்கி விழுந்து இறந்து விட்டது என தெரிவித்தார். எனவும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

யானைக்கு மயக்க மருத்து கொடுத்து 12 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது எனவும் அதன் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

கூடலூர் அருகே பிடிக்கப்பட்டு நெல்லையில் வனப்பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை, பாறையில் இருந்த புற்களை சாப்பிட சென்ற போது இடறி விழுத்து இறந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

யானையின் கழுத்தில் கட்டப்பட்ட ரேடியோ காலரில் இருந்து, அரை மணி நேரத்திற்கு ஒரு சிக்னல் கிடைக்கும் வகையில் பொருத்தப்பட்டு இருந்தது, ரோலக்ஸ் யானை நலமுடன் தான் இருந்தது, உணவும் நல்ல முறையில் எடுத்துக்கொண்டது என்றார். இதுவரை இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளில் 10 சதவீதம் மட்டுமே மாற்று இடங்களில் தங்கி இருக்கின்றது, மற்ற யானைகளை மீண்டும் மீண்டும் பிடிக்கும் சூழல் இருந்துள்ளது என தெரிவித்தார். 23 யானைகள் இது வரை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்
இதுதொடர்பான சரியான தகவல்களை நாளை தெரிவிக்கின்றேன் என்றார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.