கோவையில் நடைபெற்ற என் ஊர் என் கனவு திட்டம்…

கோவை: என் ஊர் என் கனவு திட்டம் இலக்கு 2030 (உத்திகள் மற்றும் செயல் திட்டம்) தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் கோவையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாவட்டம், வேளாண்மை பல்கலைக்கழகத்தில் என் ஊர் என் கனவு திட்டம் இலக்கு 2030 (உத்திகள் மற்றும் செயல் திட்டம்) தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான சொல்லுங்க திட்டம் அனைத்து மாவட்டங்களில் கனவை தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் கீழ் பொதுமக்களை நேரில் சந்தித்து, அரசு சார்ந்த எந்தந்த திட்டங்களின் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பது குறித்து அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்யும் பணியினை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், தொழில் உள்ளிட்டவை குறித்து 2030 ல் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற மக்களின் கனவு குறித்து கேட்டறியப்படவுள்ளது. 2030ல் கோயம்புத்தூர் மாவட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக அரசுத்துறைகளின் சார்பில் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து, உட்கட்டமைப்பு ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி கலை மற்றும் கலாச்சாரம், வேளாண்மை மற்றும் ஊரக வாழ்வாதாரம்சமூக நிதி மற்றும் உள்ளடக்கம் கல்வி, சுற்றுசூழல்காலநிலை மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட கருப்பொருட்களில் அந்தந்தத் துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட, கலந்தாய்வு நடைபெற்றது.

இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு தேவையான வசதிகள், மனித வளம், எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் உள்ளிட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ள முடியும்இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டுள்ள நீங்கள் அனைவரும் உங்களது கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளவேண்டும். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உங்கள் கருத்துக்கள் பயன் உள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

பின்னர் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது, என் ஊர் என் கனவு திட்டம் இலக்கு 2030 ( த்திகள் மற்றும் செயல் திட்டம்) தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெறுகின்றது. அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும். திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திவுள்ளார்கள்.

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் மக்களிடம் கருத்துக்களை கேட்டுஅரசு கொள்கையினை முடிவு செய்வது இதுதான் முதல்முறையாகும். இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் கூறும் கருத்துகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்இக்கலந்தாய்வுக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள அனைவரும் இங்கு வழங்கப்படும் அறிய கருத்துகளை எடுத்துக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும், தங்களுடைய கருத்துகளை எங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp