தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Advertisement

மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் (MASS) அனுபவம் வாய்ந்த வேளாண் ஆராய்ச்சியாளர்களின் குழுவின் செயல்படும் நிறுவனம் ஆகும். வேளாண் இரசாயனங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள், உயிர்தூண்டிகள், உரங்கள், தாவர ஊட்டச்சத்துகள், விதைகள் மற்றும் தாவர வளர்ச்சி தூண்டிகள் மற்றும் கட்டுப்படுத்திகளுக்கான முழுமையான ஆராய்ச்சி சோதனை சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

பல்வேறு வேளாண்-காலநிலை சூழ்நிலைகளில் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் செயல்பாட்டை அறிவியல் முறையில் மதிப்பீடு செய்து, பாதுகாப்பான, நிலைத்த மற்றும் விவசாயி மையமான வேளாண் புதுமைகளை ஆதரிப்பதே இச்சேவைகளின் நோக்கமாகும்.

இது தொடர்பாக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய இயக்குனர் முனைவர் செந்தில் மற்றும் மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவன மற்றும் தலைமை செயல் அதிகாரி முனைவர் ஆசைத்தம்பி மணிக்கம் ஆகியோர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முனைவர் சுப்ரமணியன் முன்னிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முதன்மையார் (SPGS), முனைவர் பாபு, தாவர உயிரி தொழில்நுட்பத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் கோகிலாதேவி மற்றும் முனைவர் சுரேஷ் துணைவேந்தரின் தொழில்நுட்ப தனி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.