மருதமலையில் லிப்ட் வசதியை துவக்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு…

கோவை: கோவையில் தைபூசத்தை முன்னிட்டு பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

Advertisement

தமிழ்நாடு இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயம்புத்தூர் மாவட்டம், தென்சேரிமலை, அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், சுக்கிரவார்பேட்டை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பேரூர் வட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் அன்னூர் வட்டம், அருள்மிகு மன்னீஸ்வர சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நடைபெற்ற தைப்பூசம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வுகளின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதரன், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரால், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் தென்சேரிமலை அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசாமி திருகோயிலில் புதியதாக ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா துவக்கி வைக்கப்பட்டது.

Advertisement

மற்றும் உபயதாரர்களால் தங்கத் தேரானது தேக்கு மரத்தில் செய்யப்பட்டு, தங்கத்தேர் செய்யப்பட்டதனை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, கோவை மாவட்டம் கோவை தெற்கு வட்டம், சுக்கிரவார்பேட்டை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வழங்கிய 1603 சதுர அடி நிலம் கொண்ட 3.67 சென்ட் தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இளைப்பாறும் மண்டபம் கட்டப்பட்டதை திறந்து வைத்தார்.

Advertisement

பின்னர், மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மின் தூக்கியினை பக்தர்கள் பயனபாட்டிற்காக துவக்கி வைத்தும், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம்அருள்மிகு மன்னீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு உபயதாரர்களால் வழங்கப்பட்ட தங்கத்தேர் செய்யப்பட்டதனை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் மண்ணெண்ணய் குண்டு வீசிய கும்பலில் ஒருவர் கைது…

கோவை: கோவையில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.