சூலூர் MLA மீது கல்வீச்சு- கோவையில் பரபரப்பு…

கோவை: தவெக எம்எல்ஏ சுகுமார் மீது பொதுமக்கள் கல்வீச்சு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கோவை மாவட்டம், சூலூர் அடுத்து நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தூர்வாரும் பணியை துவக்கி வைக்க வந்த சூலூர் தவெக MLA சுகுமாரை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் எம்எல்ஏ உடன் வந்த கட்சிக்காரர்கள் முன்னிலையில் எம்எல்ஏ தூர்வாரும் பணிக்கு பூமி பூஜை போட்டார்.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் எம்எல்ஏ மீது கூட்டத்தில் இருந்து கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நிழல்’ QR Code-ல் குவியும் தகவல்கள்… 2,000-க்கும் மேற்பட்ட தகவல், 7 வழக்குகள் பதிவு!

கோவை மாவட்ட காவல்துறையின் ‘நிழல்’ கியூஆர் கோடு திட்டம் மூலம் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 145-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ரகசியத் தகவல்களின் அடிப்படையில் 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...