அவினாசி சாலையில் பேருந்துகளை நிறுத்தி தகராறு செய்த ஊழியர்கள் மீது வழக்கு!

கோவை: கோவை அவினாசி சாலையில் பேருந்துகளை நிறுத்தி தகராறில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தர்மபுரியை சேர்ந்த அரவிந்த் குமார் (35). இவர் கோவையில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி அரவிந்த் குமார், என்.ஜி.ஓ காலனியில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் மினி பேருந்தில் பயணம் செய்தார்.

அந்த மினி பேருந்து கோவை-அவிநாசி ரோட்டில் ஹோப் காலேஜ் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள யூடேர்னில் அரசு பேருந்து ஒன்று வந்தது. இதில் 2 பேருந்துகளும் செல்வதில் சிரமம் ஏற்பட்டது

இதனால் மினி பேருந்து டிரைவர், கண்டக்டருக்கும், அரசு பேருந்து கண்டக்டர், டிரைவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இது அவர்களுக்கு இடையே தகராறாக மாறி இரு தரப்பினரும் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தினர்.

Advertisement

இதன் காரணமாக போக்குவரத்து நிறைந்த அவிநாசி ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி தகராறில் ஈடுபட்ட சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது,

Advertisement

இதற்கிடையே அரவிந்த் குமார் இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மினி பேருந்து மற்றும் அரசு பேருந்தின் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.