பாரதியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா- தமிழக ஆளுநர் பங்கேற்பு…

கோவை: பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

Advertisement

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழா, டாக்டர் உஷா மேத்தா அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர். என். ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான கோவி செழியன் வாழ்த்துரை வழங்கினார்.

Advertisement

இவ்விழாவின் முதன்மை விருந்தினராக ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் காமாட்சி முதலி பங்கேற்று பட்டமளிப்பு உரையாற்றினார்.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறைச் செயலாளரும், துணைவேந்தர் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர். பி. சங்கர், வரவேற்பு உரையாற்றியதோடு, பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.

Advertisement

இந்த விழாவில், பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த முனைவர் பட்டம் (Ph.D) மற்றும் டி.லிட் (D.Litt) பட்டதாரிகள் சுமார் 1500 பேர் நேரடியாக பட்டங்களைப் பெற்றனர்.

மேலும் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு என 92 ல்,287 பேர் பல்வேறு பாடப்பிரிவுகளில் பட்டங்களை பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை பதிவாளர் முனைவர் ஆர். ராஜவேல், தேர்வாணையர் முனைவர் கே. விஜயராணி மற்றும் பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்டனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...