கோவையில் திடீரென பெய்த கனமழை…

கோவை: கோவையில் திடீரென பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

Advertisement

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்தநிலையில் கோவை தடாகம் சாலை இடையார்பாளையம், கணுவாய், சாய்பாபா காலனி, வடவள்ளி பகுதிகளில் மாலை கன மழை பெய்தது.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் அதிகளவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த மழையில் நனைந்தபடி சிரமங்களுடன் வாகனத்தை இயக்கினர். பாதசாரிகளில் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.கோவையில் கடுமையான வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று பெய்த மழை குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

2 COMMENTS

Comments are closed.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...