உங்களை தேடி உங்கள் ஊரில்- பொள்ளாச்சியில் ஒரு நாள் தங்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்…

கோவை: பொள்ளாச்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசு, வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு மக்களை நேரடியாக அணுகி அவர்களது குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் அரசு இயந்திரமே களத்திற்கு வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து கள ஆய்வில் ஈடுபட்டு அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி சென்றடைவதை உறுதி செய்கிறார். இதன்படி, 22.09.2026 காலை 9.00 மணி முதல் 23.09.2026 காலை 9.00 மணி வரை பொள்ளாச்சி வட்டத்தில் இம்முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாமின் போது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத் துறைத் தலைமை அலுவலர்கள் அப்பகுதியில் தங்கியிருந்து, பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு, அந்தந்த கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலகம்வருவாய் ஆய்வாளர் (RI) அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC), சமுதாயக் கூடம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களையும் ஆய்வு செய்து, சந்திக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வார்கள்.

Advertisement

பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள். வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களை, ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டத் துறைத் தலைமை அலுவலர்கள் 22.09.2026 காலை 9.00 மணி முதல் 23.09.2026 காலை 9.00 மணி வரை ஆய்வு செய்து, வருகை தரும் பொதுமக்களிடமிருந்து மணுக்களும் பெறுவார்கள்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒதுக்கப்பட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள் தங்கள் கிராமப் பகுதிகளிலேயே மனுக்களை வழங்கலாம். மேலும், 22.09.2026 அன்று மாலை 4.00 மணியளவில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனு அளிக்கலாம்.

Advertisement

உங்களைத் தேடி உங்கள் ஊரில்திட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் மொத்தம் உள்ள 65 வருவாய் கிராமங்களிலும் நடைபெறவுள்ளது. இப்பகுதிகளின் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இத்திட்டம் குறித்து உரிய விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அரசின் நலத்திட்டங்களின் பயன்களையும் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் ஈச்சர் லாரியில் நெழிந்த பாம்பு…

கோவை: எல் அண்ட் டி பைபாஸில் திரில் ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்...