நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வு – கோவை மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாடுகள்…!

கோவை: +12 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலைக்கல்வி இரண்டாம் ஆண்டு (+2 பொதுதேர்வு) 02.03.2026 அன்று தொடங்கி 26.03.2026 அன்றுடன் முடிவடைகிறது.

இத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 130 தேர்வு மையங்களில் 365 பள்ளிகளைச் சேர்ந்த 19,344 மாணவர்கள் மற்றும் 16,368 மாணவிகள் என மொத்தம் 35,712 மாணாக்கர்கள், 852 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.

இத்தேர்விற்காக 7 காப்பு மையங்களில் 14 வினாத்தாள் கட்டுக்காப்பளர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்புடன் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தேர்வு நாளன்று 37 வழித்தடங்களில் 37 வழித்தட அலுவலர்கள் (மற்றும்) ஆயுதமேந்திய காவலர்கள் உதவியுடன் வினாத்தாள்கள் பாதுகாப்பான முறையில் தேர்வுமையங்களுக்கு சென்றடையவும் தேர்வு முடிந்தவுடன் தேர்வு நாளன்றே விடைத்தாள்களை பாதுக்காப்பான முறையில் விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்விற்க்காக 130 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 130 துறை அலுவலர்கள், 2100 அறைக் கண்காணிப்பாளர்கள் 300 நிலையான பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் அரசுத் தேர்வுகள் இயக்கக வழிகாட்டு நெறிமுறையின்படி சொல்வதை எழுதும் (SCRIBE) 343 மாணாக்கர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வர்கள் பாதுகாப்பான முறையில் தேர்வு மைங்களுக்கு சென்று வர போதிய வசதிகள் போக்குவரத்து துறையின் மூலமாகவும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேர்வு மைங்களின் சுகாதார பணிகளை உறுதி செய்யவும் மாணாக்கர்களுக்கு ஏதேனும் அவசர மருத்துவ உதவிகள் தேவை சார்ந்து சுகாதாரத்துறை மூலமாகவும் தேர்வு மைங்களுக்கு தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சாரத்துறை மூலமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாணாக்கர்கள் தேர்வு நாளன்று எவ்வித அச்சமின்றி நிதானத்துடனும், கவனமுடனும் பொதுத்தேர்வினை எழுதுவதற்கு மாவட்ட சார்பில் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...