கோவையில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அதிமுக

கோவை: கோவையில் அதிமுக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபரகரணங்கள் வழங்கப்பட்டது.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபரகரணங்கள் வழங்கப்பட்டது.

Advertisement


நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்களை அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் மற்றும் மாணவர் அணி மாநிலச் செயலாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்னேஷ் சுப்பையன், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே வி என் ஜெயராமன், மேற்கு ஒன்றியச் செயலாளர் கோவனூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஒரு கிரிக்கெட் மட்டை, 2 பந்துகள், 2 பேடுகள், கீப்பிங் கிளவுஸ், பேட்டிங் கிளவுஸ், 3 ஸ்டம்ப்புகள் மற்றும் அனைவருக்கும் தொப்பி உள்ளிட்டவைகள் இருந்தன.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

எடப்பாடி பழனிச்சாமியிடம் திட்டு வாங்குவதற்கு நீங்கள் தான் காரணம்- கோவையில் வாக்காளர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை…

கோவை: நான் எடப்பாடி பழனிச்சாமியிடம் திட்டு வாங்குவதற்கு மக்கள் தான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து மலுமிச்சம்பட்டி மற்றும் வெள்ளலூர் ஆகிய...

Video