தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி இரண்டு தினங்களுக்கு வழங்கப்படுகிறது.

கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி வருகின்ற 10 மற்றும் 11ம் தேதி ஆகிய இரண்டு தினங்களுக்கு வழங்கப்படுகிறது.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் மசாலா பொடிகளான சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடிகள், சிக்கன் 65 மசாலா பொடி ஆகிய பொடி தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

Advertisement

மேலும் தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்திரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகிய ஊறுகாய் வகை தயாரிப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பயிற்சி முதல் நாள் அன்று ஜிஎஸ்டி உடன் 1770 ரூபாய் Gpay செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொள்ளலாம் என்றும், தொலைபேசி எண் 9488518268, 0422 6611340 மின்னஞ்சல்: phtc@tnau.ac.in ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...