கோவையில் வேளாண்மை பொறியியல் தீர்வுகள் மாநாடு நடைபெற உள்ளது…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மைக்கான பொறியியல் தீர்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நாளை நடைபெற உள்ளது

Advertisement

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-க்கு உட்பட்ட வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (AEC&RI), கோயம்புத்தூரில் AGRITECH MANIFEST 2026 (ATM’ 26) நிகழ்வின் ஒரு பகுதியாக நிலைத்தன்மை கொண்ட வேளாண்மைக்கான பொறியியல் தீர்வுகள்” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு (ICEARF 2026) மார்ச் 09. 2026 அன்று நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், பேராசிரியர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். வேளாண்மையில் நிலைத்தன்மை, காலநிலை மாற்றத்துக்கு தகுந்த முறைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அறிவியல் கருத்தாடல்கள் நடைபெறும்.

மாநாட்டில் பண்ணை இயந்திர மற்றும் சக்தி பொறியியல்மண் மற்றும் நீர் பாதுகாப்பு பொறியியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல், உணவு செயலாக்க பொறியியல் மற்றும் வேளாண் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகள் குறித்து தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறும்.

Advertisement

மேலும் செயற்கை நுண்ணறிவு (AI)loT அடிப்படையிலான ஸ்மார்ட் வேளாண்மை, துல்லிய நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க
ஆற்றல் பயன்பாடு மற்றும் நிலைத்த உணவு செயலாக்க முறைகள் போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் ஆராய்ச்சி கட்டுரைகள் வாய்மொழி வழங்கல்கள் மூலம் முன்வைக்கப்படவுள்ளனதேசிய மற்றும் சர்வதேச அளவிலான சிறப்பு விருந்தினர் உரைகள், தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் ஆகியவை மாநாட்டின் சிறப்பம்சங்களாக அமையும்.

Advertisement

ICEARF 2026 மாநாடு கல்வி மற்றும் தொழில்துறை இணைப்பை வலுப்படுத்தி, எதிர்கால நிலைத்த வேளாண்மைக்கான புதுமையான பொறியியல் தீர்வுகளை உருவாக்கும் முக்கிய தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...