கோவை மேற்கு புறவழிச்சாலை திறப்பு…

கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலையை முதல்வர் திறந்து வைத்தார்.

Advertisement

கோவை மேற்கு புறவழிச்சாலை முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை தமிழ்நாடு முதல்வர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவை இது குறுத்து பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகரில் போக்குவரத்து நெருசலை குறைக்கும் வகையில் கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.43 ம் தொலைவிற்கு மூன்று கட்டங்களாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

மூன்று கட்டங்களாக துவங்கிய இந்தப் பணிக்காக சுமார் ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முதல் கட்டமாக கோவை மதுக்கரை மைல்கல் பகுதியிலிருந்து மாதம்பட்டி வரை ரூ.250 கோடி மதிப்பீட்டில் 11.8 கிலோமீட்டர் தொலைவிக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை தமிழ்நாடு முதல்வர் மு. க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இரண்டாம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரையில் 12.10 கிலோமீட்டர் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சாலை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு மேற்கு புறவழிச்சாலை திறக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் இருந்து பேரூர் மற்றும் சிறுவாணி சாலைக்கு செல்வோர் புறவழி சாலையை பயன்படுத்திக் கொள்ளவதால் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...