கோவையில் 6.5 லட்சம் பறிமுதல்…

கோவை: கோவையில் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 6.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

கோவையில் கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்து வருபவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் காண்பிக்கப்படும் பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் கோவையில் 90 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் கோவை ப்ரூக்ஃபீல்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் ரொக்கமாக 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.

அதுகுறித்து வாகன ஓட்டுநரிடம் கேட்ட பொழுது சாக்லேட் மற்றும் உணவிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை கோவை மத்திய மண்டல தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement

பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்தால் பணம் திருப்பி தரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...