மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற பொதுத்தேர்தல், 2026 அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் (40 % மேற்பட்ட) மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினைப் பெற ஏதுவாக தங்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (Booth level Officerபடிவம் 121 மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருகை தருவார்கள். அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகைதரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தினை படித்துப் பார்த்தும் படிக்கக் கேட்டும் ஆதாரங்கள் ஏதும் கோரும்பட்சத்தில் அதன் நகலினை சமர்ப்பித்து, ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பினை தர வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் (40 % மேல்) மற்றும் 85. வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வழியில் வாக்களிப்பது தொடர்பான, தங்களது விருப்பத்தினை வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கோ நேரில் சென்று 03.04.2026-க்குள் படிவம் 12D-யினை, இதற்காக பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் ரிய ஒப்பம் செய்து சமர்ப்பித்து எதிர்வரும் சட்டமன்ற பொதுதேர்தலை சுமூகமாகவும் நேர்மையாகவும் நடத்திட தக்க ஒத்துழைப்பு நல்கிடுமாறு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85.வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தேர்தல் நடத்தை விதிகள்- திருமண மண்டபங்கள், அச்சகங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்த ஆட்சியர்…

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் அச்சகங்கள் சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், பேனர் பிளக்ஸ்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை கதிர் நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானை கட்டிட தொழிலாளியை விரட்டிய சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தி, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.