கோவையில் அரசு பள்ளி மாணவி மீது சாதிய தாக்குதல்- 3 பேர் மீது புகார்…

கோவை: கோவையில் அரசு பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பீடம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி மீது தாக்குதல் நடத்தி சாதிய ரீதியாக கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி SFI, DYFI உட்பட பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.

Advertisement

அந்த மாணவன் தேர்வில் செய்த குளறுபடிகளை அந்த மாணவி ஆசிரியரிடம் கூறியதால் கடந்த நான்கு மாதங்களாக மாணவியை மிரட்டி வந்த நிலையில் அந்த மாணவனின் தாயார் மற்றும் சகோதரியும் ஊருக்குள் அந்த மாணவி எங்கு சென்றாலும் அடிக்கடி மிரட்டல் விடுவது சாதிய ரீதியாக கொச்சைப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாணவி பேருந்து நிறுத்தத்தில் நன்றி கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மாணவன் அவனது தாயார் மற்றும் சகோதரி ஆகிய மூன்று பேரும் மாணவியை சாதிய ரீதியாக கொச்சைப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் அந்த மாணவிக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது மேலும் அதனை தடுத்த வந்த மாணவியின் தாத்தாவையும் தாக்கியுள்ளனர் இது குறித்து எதிர்த்து கேட்ட மாணவியின் தாயாரையும் தாக்கி கொச்சையாக பேசி உள்ளனர்.

Advertisement

தற்பொழுது காயமடைந்த மாணவி மாணவியின் தாயார் மற்றும் தாக்கிய மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தற்பொழுது வரை உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் எனவே அந்த மாணவன் மாணவனின் தாயார் மற்றும் சகோதரி ஆகிய மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டி அளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா சூலூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே இதுபோன்று சாதிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எனவே இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்த மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

  1. சமூகநீதி ஆட்சியின் அவலங்கள் தொடர்கின்றன. மக்களே சிந்தியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

TVK வெற்றியை கொண்டாடிய கோவை காங்கிரஸ் கட்சி- தொண்டர்கள் குழப்பம்…

கோவை: தவெக வெற்றியை கோவை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடியதால் குழப்பம் நிலவியது. தமிழக வெற்றி கழகம் (தவெக) சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். 2026...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...