கோவையில் பயங்கரம்; சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை போட்டு கொ**..!

கோவை: கோவையில் சாலையோரம் படுத்து தூங்கிய எலக்ட்ரீஷியன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (56). எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (50). தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார்.

Click here to Read news கோவை ஆழ்துளை கிணறுகள்: தீயணைப்புத்துறைக்கு உத்தரவு

அவர்களுக்கு மணிகண்டன் (30) மற்றும் பரமேஸ்வரன் (27) என்ற மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்டன் டிரைவராக பணிபுரிந்து சுந்தராபுரத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

Advertisement

பரமேஸ்வரன் தாயாருடன் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரங்கநாதனுக்கு மது பழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக ரங்கநாதன் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரை பிரிந்து சாலையோரமாக வசித்து வந்தார்.

இவர் தினமும் தண்ணீர் பந்தல் அடுத்த டெலிகாம் 3வது வீதி பகுதியில் படுத்து தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் படுத்து தூங்கி உள்ளார்.

Advertisement

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் ரங்கநாதன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Click here to read news பீளமேட்டில் ஜிபே மூலம் வாலிபரிடம் வழிப்பறி… மக்களே உஷார்! 

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். அதில் அவரது அருகில் ரத்தக் கரையுடன் கல் கிடந்ததை போலீசார் பார்த்தனர். அப்போதுதான் போலீசாருக்கு மர்ம நபர் யாரோ கல்லை ரங்கநாதன் தலையில் போட்டு கொலை செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரங்கநாதன் உடலை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரங்கநாதனிடம் ஏற்கனவே மர்ம நபர் ஒருவர் 2 முறை அவரது புதிய செல்போனை பறிக்க முயற்சி செய்திருந்தது தெரியவந்தது.

இதனால் மீண்டும் செல்போன் பறிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மதுபோதையில் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட யாராவது கல்லை போட்டு கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், போலீசார் அவரது உடலின் அருகே இருந்த கல்லில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றியும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் ரங்கநாதனை கொலை செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Click here to read news பெற்றோர்களே குழந்தைகள் முன் சண்டையிடாதீர்… கோவையில் சோக சம்பவம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வபுரம் மற்றும் ஆர்எஸ் புரம் பகுதியில் சாலையோரம் படுத்து தூங்கிய யாசகர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பீளமேடு பகுதியில் சாலையோரம் படுத்து தூங்கிய எலக்ட்ரீஷியன் கொலை செய்யப்பட்டு இருப்பது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.