குஷ்புவுக்கு கிடைக்காத வாய்ப்பு.. திமுக கோட்டையில் சுந்தர்.சி போட்டி!

தேர்தலில் போட்டியிட குஷ்புவுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகையான குஷ்பு, பாஜக கட்சியில் இணைந்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பணியாற்றி வருகிறார். இதற்கு முன் அதிமுக, திமுக, காங்கிரஸ் என அனைத்து கட்சியிலும் பயணித்த அவர் பாஜகவில் சில ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது பாஜக. ஆனால் அந்த தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட மருத்துவர் எழிலன் அமோக வெற்றி பெற்று அமைச்சரானார்.

Advertisement
Khushboo

இந்த முறை குஷ்புவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என அவருக்கே தெரியாதநிலையில், அவருடைய கணவரும் இயக்குநருமான சுந்தர்.சிக்கு அல்வா மாதிரி வாய்ப்பு கதவை தட்டியுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்து வரும் ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி சார்பாக சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Sundar

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி என்றும் இடம்பிடித்திருக்கும். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவில் கூட்டணியில் நீடிக்கும். ஏசி சண்முகத்தின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

காரணம், மதுரை மத்திய தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வென்று, எம்எல்ஏவாக உள்ளார். திமுகவின் கோட்டையாக உள்ள மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி களமிறக்கப்பட்டுள்ளது சக அரசியல் கட்சிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

PTR vs Sundar C

கொங்கு மண்டலமான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயக்குநர் சுந்தர் சி, 1995ல் இயக்குநராக அறிமுகமாகி, மூக்குத்தி அம்மன், புருஷன் போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ், சரத்குமார், பிரபுதேவா, அர்ஜூன், பிரசாந்த், விஷால் உட்பட பல நடிகர்களை தனது படத்தில் இயக்கி வெற்றி பெற்றுள்ளார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றி படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி யின் சினிமா பயணம், அரசியல் பயணத்தில் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

இரண்டு நாட்களில் ஸ்டிரைக்…! கோவை மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு..!

கோவை மருந்து வணிகர்கள் சங்கம் GSR 220 விதிமுறைக்கு எதிராக மே 20 நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது, ஆன்லைன் விற்பனை தடை கோரிக்கை வைக்கப்பட்டது உள்ளது

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.