TVK candidates Coimbatore: கோவை மாவட்டத்தில் விஜய்யின் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? எந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கோவை மாவட்டத்துக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் டிவிகே சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால், தேர்தல் களம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, கூட்டணி கணக்கீடு மற்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போதைய அரசியல் நிலவரப்படி, ஆளும் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம் அதிமுக தலைமையிலான கூட்டணி பல்வேறு தொகுதிகளில் வலுவான போட்டிக்குத் தயாராகி வருகிறது. இந்த நிலையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக TVK தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
TVK candidates Coimbatore List
கோவை மாவட்டத்தில் பாரம்பரியமாக திமுக – அதிமுக போட்டி அதிகம் காணப்படும் சூழலில், இந்த முறை தவெகவும் களம் காண்பது வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
அதன்படி, விஜய் இன்று தனது கட்சி சார்பில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளார். இதில் கோவை வேட்பாளர்கள் விவரங்கள் பின்வருமாறு:-
மேட்டுப்பாளையம் தொகுதியில் சுனில் ஆனந்த், சூலூர் தொகுதியில் என்.எம். சுகுமார், கவுண்டம்பாளையம் தொகுதியில் கனிமொழி, கோவை வடக்கு தொகுதியில் சம்பத்குமார் போட்டியிடுகின்றனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் சதீஷ் ராஜு, சிங்காநல்லூர் தொகுதியில் கிரிபிரசாத், கிணத்துக்கடவு தொகுதியில் விக்னேஷ், பொள்ளாச்சி தொகுதியில் ராமநாதன், கோவை தெற்கு தொகுதியில் செந்தில்குமார் மற்றும் வால்பாறை தொகுதியில் ஸ்ரீதரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Click Here for: DMK candidates List Coimbatore
Click Here for: ADMK candidates List Coimbatore
ஏற்கனவே திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்ம் தற்போது தவெக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தேர்தல் களத்தில் நான்குமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
ஆனால், தமிழகத்தில் இரண்டுமுனைப் போட்டிகள் மட்டுமே உள்ளதாகவும், அதில் ஒன்று தவெக மற்றொன்று திமுக என்றும் விஜய் கூறி வருகிறார். இது குறித்த உங்கள் கருத்துகளை கீழே கமெண்டில் பதிவிடலாம்.





Comments are closed.