மீண்டும் நடிக்க வரும் ரோஜா சீரியல் நடிகை… எந்த சீரியல் தெரியுமா?

காணாமல் போன பிரபல சீரியல் நடிகை மீண்டும் சின்னத்திரையில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

சீரியலில் பிரபலமான பலர் அடுத்தடுத்து பல சீரியல்களில் கமிட் ஆவது இயல்புதான். ஒரு சிலர் பெரிய திரைக்கு சென்று காணாமல் போவதும் வாடிக்கைதான்.

ஆனால் சீரியலில் நடித்த பிரபலம் ஒரு சில சேனலில் மீண்டும் சீரியல்களில் வந்து காணமால் போனார். அவர் வேறுயாருமில்லை, நடிகை பிரியங்கா நல்காரி தான்.

Roja Serial Actress

சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை பிரியங்கா நல்காரிக்கு தாய் மொழியான தெலுங்கு பெரியதாக கைக்கொடுக்கவில்லை.

Advertisement

பின்னர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்த அவருக்கு பெரிய திரையில் வாய்ப்புகள் அமையவில்லை.

ஆனால் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோஸ்களை பதிவு செய்து வந்தார். இதையடுத்து அவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட பிரியங்கா, வெற்றிக்கனியை பறித்தார்.

Advertisement

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் அவரை உச்சத்துக்கே கொண்டு சென்றது. அந்த சீரியல் பல வருடம் இல்லத்தரசிகளின் அபிமான சீரியலாக ஒளிபரப்பானது,.

Seetharaman

இரண்டு சன்டிவி குடும்ப விருதுகளை வெல்லும் அளவுக்கு பிரியங்காவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இதன் பின்னர், ஜீ தமிழில் சீதாராமன், நளதமயந்தி போன்ற சீரியல்களில் தோன்றினார்.

ஆனால் அந்த சீரியல்கள் மக்கள் மத்தியில் சோபிக்கவில்லை. இதனால் மீண்டும் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவர் சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதுவும் கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கௌரி தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

Gowri

மங்கா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான தோற்றத்தில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவரது கதாபாத்திரம் தொடர்பான படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்த வாரமே அவரது என்ட்ரியை கௌரி சீரியலில் பார்க்கலாம் என சீரியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். ரோஜாவான பிரியங்கா மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுப்பது ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...