கோவை அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த நடிகர் ரவி மரியா.

கோவை: அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் நடிகர் ரவி மரியா.

Advertisement

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா காளப்பட்டி சுற்றுப் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாரை ஆதரித்து காளப்பட்டி, வீரியம் பாளையம், நேரு நகர், ஆர் ஜி புதூர் சுற்றுப் பகுதிகளில் நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா நடந்து சென்றும், பிரச்சார வாகனத்தில் சென்றும் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையாக மலர்கள் தூவி வரவேற்று ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து அங்கிருந்த மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பணிமனையை திறந்து வைத்து முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

Advertisement

தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா பேசும்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறார். திமுக ஆட்சியில் பட்ட சின்ன சின்ன கஷ்டங்களை போக்கிக் கொள்ள இந்த பத்தாயிரம் ரூபாய் வழங்குகிறார். அதேபோல் ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே குலவிளக்கு திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பப் பெண்களுக்கும் மாதம் 2000 வழங்க உள்ளார். மேலும் தீபாவளிக்கு பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்குகிறார் எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...