கோவையில் சிலிண்டரை வெளியில் பயன்படுத்திய பேக்கரி உரிமையாளருக்கு மீது வழக்கு

கோவை : செல்வபுரத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி சிலிண்டரை வெளியில் பயன்படுத்திய பேக்கரி உரிமையாளருக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் பள்ளி அருகே உள்ள பேக்கரியை சிவராமகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பேக்கரியில் உணவு பொருட்கள் வெளிப்புறத்தில் தயாரிக்கப்பட்டதை கவனித்தனர்.

அப்போது எரிவாயு சிலிண்டர் வெளியில் வைத்து பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், போலீசார் உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், போலீசாரின் அறிவுறுத்தலை அவர் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளி அருகே இந்த செயல் நடந்ததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்பட வாய்ப்பு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து செல்வபுரம் போலீசார் சிவராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை குற்றாலம் மூடப்பட்டது…

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவி இன்று மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான "கோவை குற்றாலம்" (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...