குழந்தை பெத்துக்க திருமணம் தேவையில்லை… பிரபல நடிகை கருத்துக்கு எதிர்ப்பு!

குழந்தை பெற்றுக்கொள்ள திருமணம் தேவையில்லை என சமீபத்தில் திவ்யா சத்யராஜ் கூறிய நிலையில், தற்போது பிரபல நடிகையும் அதே கருத்தை பதிவு செய்துள்ளார்.

Advertisement

காலம் மாற மாற அறிவியல் உலகம் உச்சக்கட்ட வளர்ச்சியை எட்டி வருகிறது. குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் பலர், அறிவியல் முறை மூலம் சில மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு செயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். அதில் தாம்பத்ய உறவு மேற்கொள்ளாமல் தம்பதிகள் பலர் குழந்தையை பெற்றுவருகின்றனர்.

Pregnant

இந்த அறிவியல் மருத்துவ முறைகள்தான் தற்போது சினிமாத்துறையில் ஹாட் டாபிக்காக உள்ளது. காரணம், சமீபத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பேசியதுதான்.

எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை. திருமணம் செய்தாலும், அவரவர் வீட்டில் தனியாக வாழலாம், இணைந்திருப்பதுதான் திருமண வாழ்க்கை என்பதில்லை. மனம் ஒத்துப்போனால் போதும்.

Advertisement
Divya Sathyaraj

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதில் எந்த தவறும் இல்லை, தாலிக்கட்டாமல் திருமணம் செய்யாடமமல் ஒருவரை ஒருவர் புரிந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

திவ்யா சத்யராஜ் கருத்துக்கு அவரது தந்தையும் நடிகருமான சத்யராஜ் ஆதரவாக கருத்தையே தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவும் எழுந்தன.

Advertisement

இதே போன்று, திருமணம், குடும்பம் மற்றும் தாய்மை குறித்து சமூகத்தில் நிலவும் பாரம்பரியக் கருத்துக்களுக்கு மாறாக ஒரு விவாதத்தை தூண்டும் வகையில் பிரபல நடிகை நித்யா மேனன் தெரிவித்த கருத்துகள் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

Nithya Menen

37 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தனது விருப்பப்படி முன்னெடுத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “குழந்தை வேண்டும் என்பதற்காக கட்டாயமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். மேலும், நவீன அறிவியல் வளர்ச்சியால், திருமணம் இல்லாமலேயே பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் பல்வேறு முறைகள் இன்று கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற வழிகளைப் பயன்படுத்தி ஏற்கனவே பலரும் பெற்றோராகி உள்ளனர் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

Nithya

நித்யா மேனனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. சிலர் அவரது கருத்தை முன்னேற்றமான சிந்தனையாக பாராட்டினாலும், மற்றொருபக்கம் பலர் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, இதற்கு முன்பு இதேபோன்ற கருத்தை வெளியிட்ட திவ்யா சத்யராஜ் மீது எழுந்த சர்ச்சையைப் போலவே, இப்போது நித்யா மேனனும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

Flipkart Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

தனுஷூக்கு அரசியல் எதிர்காலம் இருக்கு… விஜய்யால் முதல்வர் கனவில் வரிசை கட்டி நிற்கும் நடிகர்கள்…!

கோவை: எம்ஜிஆருக்குப் பிறகு யாரும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கிய முதல்வர் விஜய்யின் அரசியல் வளர்ச்சி, தமிழ் சினிமா திரையுலகில் பலருக்கும் முதல்வர் ஆசையை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...