கோவையில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

கோவை: மே 4ம் தேதி மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தினமான மே 4ம் தேதி அனைத்து வகையான மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று நடைபெற உள்ளதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள FL1 முதல் FL1 வரையிலான அனைத்து மதுபான உரிமம் பெற்ற வளாகங்களை 04.05.2026 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று ‘மதுவிலக்கு நாட்களாக (Dry Day) அறிவித்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மதுபான உரிமத்தளங்களில் மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீதுதமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து...