மே மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி மே 2026 மாதத்திற்கான பயிற்சி 05.05.2026 செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள விழைவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.850/நபர் நேரிடையாக செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 590/நபர் (அடையாள சான்று அவசியம்). பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை ஆகும்.

மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்
தொலைப்பேசி எண்: 0422-6611336, 0422-6611226; 9629496555; 6379298064; 9361889846
மின்னஞ்சல்: pathology@tnau.ac.in

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அறிவித்தால் எதிர்ப்போம்- கோவையில் ஓபிசி கட்சியினர் தெரிவிப்பு…

கோவை: வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை அறிவித்தால் 251 சமுதாயத்தினர் எதிர்ப்போம் என ஓபிசி மக்கள் உரிமை கட்சியினர் தெரிவித்துள்ளனர். கோவையில் ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

கோவை: அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற பெண் நோயாளிக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்...