கோவையில் பெய்த கனமழை- அரசு பள்ளி சுற்றுசுவர் மீது விழுந்த மரம்…

கோவை: கோவையில் அரசு பள்ளி சுற்றுசுவர் மீது சாய்ந்த மரத்தால் சுற்றுசுவர் பலத்த சேதமடைந்தது.

Advertisement

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி கோவையில் நேற்று மாலை துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், தடாகம் சாலை இடையர்பாளையம் கணுவாய் சோமயனூர் திருவள்ளூர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்து பல பகுதிகளில் மின் கம்பிகள் மீது விழுந்து மின் தடையும் ஏற்பட்டது. இந்நிலையில் கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று மாலை பலத்த பெய்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக மரங்கள் வேரோடு சாந்தன.

Advertisement

இதில் அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது.
இதன் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் பலத்த சேதம் அடைந்துள்ளது. காற்றின் வேகத்தால் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த சோலார் பேனல்கள் பறந்து வந்து தரையில் விழுந்ததுள்ளது. மேலும் சாலையின் குறுக்கே விழுந்தன.

இதையடுத்து மழை நின்றதும் இரவு மாநகராட்சி ஊழியர்கள் அறுவை இயந்திரங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மரத்த்தின் ஒரு பகுதியை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...