கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று 131 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.
கோவையில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் வருகிற 4ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
அதன்படி மாவட்டத்தில் நேற்று 131 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
மேட்டுப்பாளையம், பில்லூர் அணை தலா 29, வேளாண் பல்கலைக்கழகம் 23.08, சோலையார் 17, அன்னூர் 10.20, தொண்டாமுத்தூர் 8,
சிறுவாணி அடிவாரம் 5, சின்னக்கல்லார் 4, சின்கோனா 2, வால்பாறை பிஏபி 2, வால்பாறை தாலுகா 1 என மொத்தம் 131 மி.மீ மழை பதிவாகி இருந்தது.


