கோவையில் மேதின விழா கோலாகலம்; பல்வேறு இடங்களில் கொடியேற்றம்

கோவை: கோவையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் மேதின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது

மேதினத்தை முன்னிட்டு உக்கடம் பகுதியில் திமுக ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் கொடியேற்றி வைத்து, பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

வடகோவை பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனுடன், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்திலும் மேதின விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலையில், செயலாளர் ராமசுப்பிரமணியம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கிளை செயலாளர் ஜெயபால் மேதினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

Advertisement

இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் விறகு வெட்ட சென்ற முதியவர்- காட்டெருமையால் நேர்ந்த சோகம்…

கோவை: விறகு வெட்ட சென்ற இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். கோவை அருகே விறகு வெட்டும் வேலைக்கு இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை...

Latest News Coimbatore

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.