சித்ரா பெளர்ணமி- கோவையில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி…

கோவை: கோவையில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிகரம் கலைக்குழுவினரின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

கோவை துடியலூர் அருகே ஜங்கமனநாயக்கன்பாளையத்தில் சித்ரா பெளர்ணமியை ஒட்டி ராஜ கணபதி திருக்கோவிலில் சிகரம் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுமியர்கள் ஒரே மாதிரியான உடையணிந்து பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களுக்கு தொடர்ந்து 3 மணி நேரம் நடனமாடி அசத்தினர்.

நாட்டுப்புற கலையான வள்ளி கும்மியை வளர்க்கும் நோக்கில் கோவையைச் சேர்ந்த சிகரம் கலைக்குழுவினரிடம் ஜங்கமநாயக்கன்பாளையம் மற்றும் சர்வோதய காலனி பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 2 மாதங்களாக பயிற்சி எடுத்து வந்தனர்.

Advertisement

இதையடுத்து சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு ஜங்கமநாயக்கன்பாளையம் ராஜ கணபதி திருக்கோவிலில் சிகரம் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே மாதிரியான உடையணிந்து பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களுக்கு தொடர்ந்து 3 மணி நேரம் நடனமாடி அசத்தினர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...