கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதி முடித்து வெளியில் வந்த மாணவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் என்று நீட் தேர்வு நடைபெற்றது கோவையில் 16 மையங்களில் நீட் தேர்வானது நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வானது மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்த மாணவர்களே அவர்களது பெற்றோர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று தேர்வு எவ்வாறு எழுந்தது என்பது பற்றி கேட்டு அறிந்தனர்.
நீட் தேர்வு எழுதி விட்டு வெளியில் வந்த மாணவர்கள் கூறுகையில் சிலர் இயற்பியல் பாடம் சற்று சிரமமாக இருந்ததாக தெரிவித்தனர். சிலர் காலநேரம் போதவில்லை என்றும் கால நேரத்தை நீட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தனர்.
அதே சமயம் சிலர் உயிரியல் பாடம் எளிமையாக இருந்ததாக கூறினர். மேலும் தேர்வு மையத்தில் குடிநீர் வசதி ஆகியவை நல்ல முறையில் செய்து இருந்ததாக தெரிவித்தனர்.





Comments are closed.