கோவை: கோவை அன்னூர் சக்தி சாலையில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சக்தி சாலையில் இன்று அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடியோ
விசாரணையில் உயிரிழந்தவர் அன்னூர் பகுதியை சேர்ந்த ஹரி சங்கர் (28) என்பதும், அவர் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விபத்து நடந்த தருணத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அரசு பேருந்து ஓட்டுநர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தமிழரசன் என்பவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


