பத்மா விருதுக்கு விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அழைப்பு!

கோவை: 2027 ஆம் ஆண்டு பத்மா விருதுகளுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2027 ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள பத்மா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொது நலம், சிவில் சேவைகள், வணிகம் மற்றும் தொழில் உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Read news:இன்டர்நெட் இல்லாமலே கேமரா கண்காணிப்பு; கோவையில் புதிய திட்டம்

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளமான awards.tn.gov.in மூலம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தங்களது கருத்துருவை வரும் மே 25ம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண் 5, தரை தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோயம்புத்தூர் – 641018 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடங்குகிறது

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடங்குகிறது. தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்து, தேர்தல் நடத்தை விதிகள் தற்போது விலக்கிக்...

Video