12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான உடனே கல்லூரிக்கு விரைந்த மாணவ மாணவிகள்…

கோவை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் கல்லூரியில் முன்பதிவு செய்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவையில் பல்வேறு தனியார் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முன்பதிவு துவங்கி உள்ளது. மாணவ மாணவிகள் பலரும் ஆர்வமுடன் வந்து முன்பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதனை தொடர்ந்து பல்வேறு தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முன்பதிவு துவங்கி உள்ளது. அதன்படி கோவை மாவட்டத்திலும் பல்வேறு கல்லூரிகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடனும் நண்பர்களுடனும் கல்லூரிகளுக்கு வருகை புரிந்து அவர்களுக்கு பிடித்த பாடத்தை தேர்வு செய்து வருகின்றனர்.

மேலும் மாணவ மாணவிகளுக்கு உதவி புரியும் வகையில் உதவி மையமும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டு மதிப்பெண்ணிற்கு ஏற்ப எந்த பாடத்திட்டம் சரியாக இருக்கும் என்றும் எடுத்துரைக்கப்படுகிறது.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு- மக்கள் சோகம்…

கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகம், போளுவாம்பட்டி பிளாக்-1 காப்புக்காடு எல்லைக்கு வெளியே சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார்...

Video

கோவையில் அதிகாலையில் பாலை திருடும் கணவன் மனைவி- சிசிடிவி காட்சிகள்…

கோவை கோவில்மேடு பகுதியில் அதிகாலையில் கணவன் மனைவி இணைந்து பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது