TVK வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: கோவையில் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு ஆளுநர் பதவி விலக வேண்டுமென முழக்கங்களை எழுப்பப்பட்டது.

Advertisement

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. எனவே தமிழக வெற்றி கழகம் பல்வேறு கட்சிகளின் ஆதரவை கோரி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் மட்டும் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றி கழகம் கட்சியினரும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் என்றும் தெரிவித்தும்ஆளுநர் தற்பொழுது வரை அழைப்பு விடுக்காத சூழலால் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது.

Advertisement

இந்த நிலையில் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபித்தால் போதும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

உடனடியாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஆளுநர் பதவி விலக வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆளுநர் பாசிச ஆட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.