கோவை: ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக, 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று உள்ளது அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் நேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் புதிய முதல்வரின் புகைப்படங்களை வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை இருந்த புகைப்படங்கள் அகற்றப்பட்டு, புதிய முதல்வர் விஜய்யின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய முதல்வரின் புகைப்படங்கள் மாற்றும் போது, அதை அங்கு இருந்தவர்கள் ஆர்வத்துடன் அதனைக் கண்டு ரசித்து செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


