வெளியான கருப்பு திரைப்படம்- கோவையில் உற்சாக கொண்டாட்டம்…

கோவை: சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியானதை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Advertisement

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சூர்யா, திர்ஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் நேற்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால் தடையானது.

பின்னர் இன்று அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒது பகுதியாக கோவை துடியலூர் பகுதியில் உள்ள முருகன் திரையரங்கில் சூர்யா ரசிகர் மன்றத்தினர் மாலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சூர்யா பேனருக்கு பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள் பலரும் கருப்பு சட்டை அணிந்து கொண்டு ஒருவருக்கொருவர் திருநீறு பூசி கருப்பா கருப்பா என்று முழக்கமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

மேலும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது ரசிகர் ஒருவர் ஆபத்தான முறையில் பட்டாசை கையில் பிடித்தவாறு சுழற்றினார். இதனால் அருகில் இருந்தவர்கள் விலகிச் சென்றனர். பின்னர் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...