டாக்டரா? டாக்டரேட் பட்டமா?- விளக்கம் அளித்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ

கோவை: தான் ஜோதிடத்தில் தான் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளதாக படிப்பு தொடர்பான சந்தேகத்திற்கு MLA கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள மருத்துவர்கள் செவிலியர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் துடியலூர் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள காய்கறி வியாபாரிகள் இடமும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இங்கு பணியாட்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர் அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வருவதாக தெரிவித்துள்ளனர், அதற்கான மருந்துகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர் அவையும் கூடிய விரைவில் சரி செய்யப்படும் அதே சமயம் நாய் கடிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

Advertisement

சந்தை நடைபெறும் இடத்திலும் சில பிரச்சனைகள் உள்ளது
லீசுக்கு எடுப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் இது குறித்து ஏற்கனவே அவர்கள் மனு அளித்துள்ளார்கள் அது சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக அந்த பகுதியில் கழிவுகள் பிரச்சனை அதிக அளவு உள்ளது அவை கூடிய விரைவில் சரி செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

BA.BL படிப்பு என அபிடவிட்டில் குறிப்பிட்டு டாக்டர் என பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டு வருவது குறித்து தற்போது நிலவி வரும் கருத்துக்கள் தொடர்பான கேள்விக்கு நான் டாக்டரேட் பட்டம் ஜோதிடத்தில் தான் வாங்கி உள்ளேன். என்னுடைய Profession சட்டப்படிப்பு தான் நான் அடிப்படையில் வழக்கறிஞர். ஜோதிடத்தில் ஆர்வம் என்பதால் அதில் டாக்டரேட் முடித்துள்ளேன் என்றார்.

Advertisement

மருத்துவம் படித்த டாக்டராக இருந்தாலும் சரி டாக்டரேட் படுத்திருந்தாலும் சரி அதனை டாக்டர் என்றுதான் பொதுவாக குறிப்பிடுவார்கள் அப்படி இருக்கும் பொழுது டாக்டர் என்பது எனக்கு புனைபெயராக மாறிவிட்டது, என்னுடைய வலைதள வீடியோக்கள் அனைத்தும் உடல் நலம் சார்ந்து அதிகமாக இருக்கும் அதனால் டாக்டர் படித்துக் கொண்டு இவ்வாறு சர்ச்சையாக பேசுகிறேன் என்று புரிந்து கொண்டு விட்டார்கள் என குறிப்பிட்டார். நான் அடிப்படையில் சட்டப்படிப்பு படித்தவர் ஜோதிடத்தில் டாக்டரேட் முடித்துள்ளேன் என்று விளக்கம் அளித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...