கோவை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மத்திய மாநில அரசு மானிய திட்டங்கள் பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் பெற வேண்டும்.

Advertisement

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசு மானிய திட்டம் பெறுவதற்கும் இடுப்பொருள் பெறுவதற்கும் மற்றும் பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டம் பெற ஏதுவாக தங்கள் நிலை உடமை விவரங்களை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்காக விவசாயிகள் தங்களின் நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு அனைத்து ஒன்றிய வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் தங்கள் கிராமத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் பங்கு பெற்று தங்கள் ஆதார் எண் கைபேசி எண் மற்றும் நில பட்டா சர்வே எண் உடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவின் போது மூன்று முறை கடவுச்சொல்லின் அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது எனவே வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் தொடர்பு கொள்ளும்போது தங்கள் விவரங்கள் பகிர்வதுடன் கடவு சொல்லையும் தெரிவிக்க வேண்டும். அப்போது உங்களுக்கான தனித்துவமான விவசாய அடையாள எண்ணும் பெறப்படும்.

Advertisement

ஆதார் கடவுச்சொல் பதிவு கொள்ள முடியாத சூழ்நிலையில் கருவிழி மூலம் பதிவு செய்யலாம்இதற்கான விவசாயிகள் சுயமாக பதிவு செய்ய Farmer Sahayak App TN செயலி மூலம் பதிவு செய்யலாம் தங்கள் பகுதியில் உள்ள இ சேவை மையங்களிலும் விவசாய அடையாள எண் பெற பதிவு செய்து கொள்ளலாம்.

coimbatore latest news tamil

இப்பணிகளை கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடவும் மற்றும் அனைத்து விவசாயிகளை தனித்துவ அடையாள எண் பெறுவதை உறுதி செய்திடவும் தோட்டக்கலை துறையின் கூடுதல் இயக்குனர் ராம்பிரசாத் கடந்து இரண்டு நாட்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார் என தோட்டக்கலை துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...