வெளியூர் சென்ற குடும்பம்..! வீட்டில் நகை, லேப்டாப் திருடிய மர்ம கும்பல்..!

கோவை: குனியமுத்தூரில் வியாபாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சாஸ்தா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முகமது பாரூர். இவரது மகன் சமர் அகமது (44) மரக்கடையில் செருப்பு கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் கனகவல்லி என்பவர், சென்னையில் இருந்த முகமது பாரூருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அவசரமாக கோவைக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முகமது பாரூர் வெளியூர் செல்லும் நேரங்களில் வீட்டுச் சாவியை பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகவல்லியிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்யும் பெண், அவரிடம் இருந்து சாவியை வாங்கி வேலை முடிந்ததும் மீண்டும் ஒப்படைத்துள்ளார்.

Advertisement

அதன்பிறகு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து 3¾ பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க குனியமுத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கணவர் மீது புகார் அளிப்பேன்- சூலூர் சிறுமியின் தாய் ஆவேசம்…

கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தந்தை மீது புகார் அளிப்பேன் என்று தாயார் தெரிவித்துள்ளார். கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் தாயார் போத்தனூர் பகுதியில்...

Video

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு – பரபரப்பான மீட்பு!

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆட்டினை விழுங்க முயன்ற 13 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.